எங்கள் இனிய வலைப்பூ மக்களே... உங்கள் பாசத்துக்குரிய வெட்டிப்பசங்க முதல்முறையாக ஒரு சொந்த வலைப்பூவுடன் களமிறங்குகிறோம்.(பாரதிராஜா ஸ்டைல் மாமே..)
இவ்வளவு நாட்கள் தமிழ் வலைப்பக்க உலகில் அவ்வப்போது என்ன நடக்கிறதென்று எட்டிப்பார்த்து, ஒரு பார்பவையாளர்களாக மட்டுமே இருந்த நாங்கள் முதல்முறையாக ஒரு சொந்த வலைப்பக்கம் துணையுடன் களத்தில் குதிக்கிறோம். நாங்கள் முன்பே கூறியதுபோல் இது எங்க காலேஜ் நினைவுகளை பகிர்ந்துக்கிறது மட்டுமில்லாமல் வெட்டி மொக்கைக்கும்தான்.எங்களாலான இந்த சிறிய முயற்சிக்கு வலையுலக ஜாம்பவான்களின் ஆதரவையும், வெளியிலிருந்து ஆதரவு தரும் (அவ்வப்போது எட்டிப்பார்த்து விட்டு மட்டும் செல்கிற) நண்பர்களின் ஆதரவையும் ஒருங்கே வேண்டி தாழ்மையுடன் கைகூப்பி வணங்கும் வெட்டிப்பசங்க...
(ஏற்கனவே இருக்கிறவனுங்க குடுக்கிற இம்சையே தாங்க முடியலை.. இதுல நீங்க வேறயாடா..ன்னு யாரோ புலம்புறமாதிரி இருக்கு..) அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறோம். நாங்க இப்படி புதுசா ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்கப் போறோம்கிற நியூஸ் எப்படித்தான் வெளியே கசிஞ்சுதுன்னு தெரியலை.உள்ளூர் சன்டிவி, கலைஞர் டிவியில் ஆரம்பிச்சு பி.பி.சி, சி.என்.என் வரைக்கும் வந்து குமிஞ்சுட்டாங்க. வேற வழியில்லாமல் அவங்களுக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியதாயிடுச்சு. அந்த பேட்டி விவரங்களை விரிவாக அடுத்த பதிவில் கொடுக்கிறோம்.
எங்க முதல் பதிவைப் பார்த்தாச்சுல்ல.. ஏதாவது கருத்தைச் சொல்லிட்டுப்போறது.. அதை விட்டுட்டு இப்படி முறைச்சுப் பார்த்தா என்ன அர்த்தம்?
இங்கேதான் நாங்க புதுசு.. தெற்கே எங்களுக்குதான் மவுசு..
மொக்கை வகை
அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
Such a wonderful site I have ever seen..
hats off to all the moderators who worked day and night in establishing this.
உண்மையச் சொல்லுங்க. 2 வருசத்துக்கு முன்னால இருந்த பதிவு போட்டிட்டு இருந்த நாலு பேரு நீங்கதானே?
(ஏற்கனவே இருக்கிறவனுங்க குடுக்கிற இம்சையே தாங்க முடியலை.. இதுல நீங்க வேறயாடா..ன்னு யாரோ புலம்புறமாதிரி இருக்கு..)
வாங்க வாங்க வாழ்த்துக்கள்...
நக்கல் ஜாஸ்தியாத்தான் இருக்கு. குமாரபாளையமா? மாமால்லாம் எந்த காலேஜ்?
சரி சரி நாங்களும் இங்க இம்சையத்தான் கொடுக்கிறோம். நீங்களும் கலக்குங்க
//வாங்க வாங்க வாழ்த்துக்கள்...//
வாழ்த்துக்களுக்கு நன்றி,Baby Pavan அவர்களே..
//சரி சரி நாங்களும் இங்க இம்சையத்தான் கொடுக்கிறோம். நீங்களும் கலக்குங்க//
ஆதரவுக்கு மிக்க நன்றி நிலா..
//குமாரபாளையமா? மாமால்லாம் எந்த காலேஜ்? //
சத்தியமா உங்க ஸ்கூல் பக்கத்திலே இருக்கும் காலேஜ் இல்லை. கவலைப்படாதீங்க.. (சும்மா காமெடிக்கு.. தப்பா எடுத்துக்காதீங்க..)