கேள்வி: உங்களோட இந்த முயற்சிக்கு பத்திரிக்கை,டிவி நிருபர்கள் சார்பாக
வாழ்த்துக்கள்.
பதில்: நன்றி
கேள்வி: உங்களைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்?
பதில்: நாங்க நாலு பேரு. வெட்டிப்பசங்க.. நான் கே.கே. இவன் என்.எஸ்.அவன்பருத்திவீரன் சித்தப்பு.ஏதோ எல்லாரையும் மாதிரி காலேஜ் போனோம்படிச்சோம்னு இல்லாம எப்பவும் வெட்டியா சுத்திக்கிட்டு, மொக்கையைப்போட்டுக்கிட்டு திரிஞ்சோம்.இப்படியே விட்டால் அந்த மொக்கையெல்லாம்எங்களோடேயே அழிஞ்சுடுமேங்கற கவலையில் தமிழ்கூறும் நல்லுலகிற்குஎங்க மொக்கைகளை எல்லாம் எடுத்துக்கூற ஆசைப்பட்டதோட விளைவுதான்இந்த வலைப்பூ.
கேள்வி: நீங்க நாலு பேர்னு சொன்னீங்க. ஆனால் மூணுபேரை மட்டும்தானேஅறிமுகம் செய்றீங்க. அப்போ யார் அந்த நாலாவது நபர்?
பதில்: நம்ம தமிழ்நாட்டு அரசியலையே எடுத்துக்குங்க. கூட்டணியில்இருந்துக்கிட்டே ஆட்சியில் பங்கெடுத்துக்காம சிலர் வெளியிலிருந்து ஆதரவுதருவதில்லையா? அதுபோல்தான் அந்த நான்காம் நபர். இந்த வலைப்பக்கத்தைப்பொறுத்தவரைக்கும் இதன் வளர்ச்சியில் அவர் ஒரு முக்கியமான நபர். ஆனால்தான் யாரென்ற அடையாளத்தை எப்போதும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்.
கேள்வி: அந்த நான்காவது நபர் யார்னு படிக்கிறவங்களால் கண்டுபிடிக்கமுடியுமா?
பதில்: நிச்சயமாக முடியாது. அவர் யார் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்தரகசியம்.
கேள்வி: அவர் யாராயிருப்பார்னு கண்டுபிடிக்க ஒரு சின்ன க்ளூ தாங்களேன்.. பிளீஸ்..
பதில்: அவர் Mr. ஊமைக் குசும்பன்னு வைச்சுக்கங்களேன். இதற்குமேலஅவரைப்பத்தி இப்ப எதுவும் சொல்ல முடியாது.
கேள்வி: உங்க காலேஜ் ஃப்ரண்ட்ஸ் மேல இருக்கிற தனிப்பட்ட விரோதங்கள்காரணமாகத்தான் நீங்க இந்த வலைப்பதிவை ஆரம்பிச்சு அவங்களைப் பற்றிஎழுதப்போறதா சொல்றாங்களே?
பதில்: யாருடா நீ ....எந்த டி.வி. டா நீ.....பேத்துருவேன்....(சித்தப்பூ டென்ஷனாக..) (மீடியாக்காரர்களும் பதிலுக்கு எகிற, நிலைமை அடிதடிரேஞ்சுக்கு போகிறது.இடைப்புகுந்த கே.கே. அனைவரையும் அமைதிப் படுத்திஅவரே பதிலளிக்கிறார்.)
பதில்: தனிப்பட்ட விரோதம்னு குறிப்பிட்டு சொல்ற அளவுக்கு எதுவும்கிடையாது.ஏதோ எங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை பகிரங்கமாகவெளியுலகுக்கு சொல்றதுல ஒரு அல்ப சந்தோஷம்.. அவ்வளவுதான்...
கேள்வி: நீங்க இப்படி உண்மைகளை அப்பட்டமாக வெளியிடப் போவதால்உங்கள் நண்பர்கள் பலரின் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமே?
பதில்: ஒண்ணு நீங்க கவனிக்கனும். நாங்க சொல்லப்போற சம்பவங்களீல்யாரோட பெயரையும் குறிப்பிடப் போவதில்லை.சம்பந்தபட்டவங்களையும்ஜமீன்,பரமக்குடியார்,மச்சி,பாண்டு, ஏழரையடி என்று அவங்களுக்குன்னுஇருக்கிற பிரத்யேக பெயரைத்தான் உபயோகப்படுத்தப் போகிறோம்.இதனால்யாருக்கும் கோபம்வர வாய்ப்பில்லைன்னு நினைக்கிறோம்.
கேள்வி: இந்த பெயரை நீங்க தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் என்னன்னுதெரிஞ்சுக்கலாமா?
பதில்: இப்படி ஒரு ஐடியா வந்ததுமே எங்களுக்கு முதலில் நினைவுக்கு வந்ததுத(றுத)லை ஜமீன்தான்.மொக்கைராசாவா திரிஞ்ச எங்க தங்கதலைவர், சிங்கக்குட்டி ஜமீன்(பின்பாதி உண்மை) பெயரைத்தவிர வேறு எத வச்சாலும்எடுபடாதுன்னு தோணுச்சு.
(பின்குறிப்பு) இந்த பெயரை நாங்க ரெஜிஸ்டர் செஞ்ச 5 வது நிமிஷமே Larry Page ம் Sergei Brin ம் (அதாங்க நம்ம கூகிள் ஃபவுண்டர்ஸ்) "இத்தனை வருஷஅனுபவத்துல இப்படி ஒரு Innovative ஆன பெயரை நாங்க கேள்விப்பட்டதேஇல்லை" ன்னு ஒரு மெயிலை போட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன்.
எந்த டி.வி. டா நீ.....பேத்துருவேன்....சித்தப்பூ டென்ஷன்
இங்கேதான் நாங்க புதுசு.. தெற்கே எங்களுக்குதான் மவுசு..
எங்கள் இனிய வலைப்பூ மக்களே... உங்கள் பாசத்துக்குரிய வெட்டிப்பசங்க முதல்முறையாக ஒரு சொந்த வலைப்பூவுடன் களமிறங்குகிறோம்.(பாரதிராஜா ஸ்டைல் மாமே..)
இவ்வளவு நாட்கள் தமிழ் வலைப்பக்க உலகில் அவ்வப்போது என்ன நடக்கிறதென்று எட்டிப்பார்த்து, ஒரு பார்பவையாளர்களாக மட்டுமே இருந்த நாங்கள் முதல்முறையாக ஒரு சொந்த வலைப்பக்கம் துணையுடன் களத்தில் குதிக்கிறோம். நாங்கள் முன்பே கூறியதுபோல் இது எங்க காலேஜ் நினைவுகளை பகிர்ந்துக்கிறது மட்டுமில்லாமல் வெட்டி மொக்கைக்கும்தான்.எங்களாலான இந்த சிறிய முயற்சிக்கு வலையுலக ஜாம்பவான்களின் ஆதரவையும், வெளியிலிருந்து ஆதரவு தரும் (அவ்வப்போது எட்டிப்பார்த்து விட்டு மட்டும் செல்கிற) நண்பர்களின் ஆதரவையும் ஒருங்கே வேண்டி தாழ்மையுடன் கைகூப்பி வணங்கும் வெட்டிப்பசங்க...
(ஏற்கனவே இருக்கிறவனுங்க குடுக்கிற இம்சையே தாங்க முடியலை.. இதுல நீங்க வேறயாடா..ன்னு யாரோ புலம்புறமாதிரி இருக்கு..) அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறோம். நாங்க இப்படி புதுசா ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்கப் போறோம்கிற நியூஸ் எப்படித்தான் வெளியே கசிஞ்சுதுன்னு தெரியலை.உள்ளூர் சன்டிவி, கலைஞர் டிவியில் ஆரம்பிச்சு பி.பி.சி, சி.என்.என் வரைக்கும் வந்து குமிஞ்சுட்டாங்க. வேற வழியில்லாமல் அவங்களுக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியதாயிடுச்சு. அந்த பேட்டி விவரங்களை விரிவாக அடுத்த பதிவில் கொடுக்கிறோம்.
எங்க முதல் பதிவைப் பார்த்தாச்சுல்ல.. ஏதாவது கருத்தைச் சொல்லிட்டுப்போறது.. அதை விட்டுட்டு இப்படி முறைச்சுப் பார்த்தா என்ன அர்த்தம்?