தீவுத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்



இதற்கிடையே இதுவரை வெளியான பதிவுகளால் ஏற்பட்ட சட்ட சிக்கல்களை(!) தீர்ப்பதற்காக பொதுக்குழு கூட்டத்திற்காக கே.கே வும், என்.எஸ் ம் ஆபிஸிக்கு லீவ் போட்டுவிட்டு சித்தப்பூவை சந்திக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை STD யில் பிடித்தபோது....


யூ.கே: ஹலோ

கே.கே: சொல்றா.. அங்கே ஏதும் பிரச்சினையில்லையே...

யூ.கே: ** நீ பாட்டுக்கு சென்னையைவிட்டு ஓடினால் போதும்னு எஸ்ஸாயிட்டே.. இங்கே எந்த நேரத்துல எவன் வந்து அடிக்கப்போறான்னு தெரியாம பம்மிக்கிட்டிருக்கேன்.

கே.கே: விடுடா ஜமீன்லாம் ஒரு ஆளுன்னு பயப்படுறியே.. அதுவுமில்லாமல் உன் பேரை இதுவரைக்கும் எங்கேயும் சொல்லவேயில்லை.. அதனால் ஜமீனுக்கு நீதான் எழுதறேன்னு உன்மேல டவுட் வர சான்ஸே இல்லை.. சும்மா தைரியமா தூங்கு..

யூ.கே: அது சரிதான் மச்சி.. ஆனால் இப்போ போட்டேன் பாரு ஜுனியர் மேட்டர் பத்தி ஒரு பதிவு. அது எனக்கும்,ஜமீனுக்கும் மட்டும் தெரிஞ்ச ஒரு ரகசியம். இதைப்படிச்சா சத்தியமாய் நான் தான் எழுதினேன்னு கண்டுபிடிச்சுடுவான்..

கே.கே: டேய் யூ.கே... ஜமீன் என்ன பெரிய இவனாடா.. சரி ஒண்ணு பண்ணு.. நாளைக்கே ஜமீனை நேரிலே போய்பாரு.. முதல்ல கொஞ்சம் குதிப்பான். அப்படியே ரெண்டு ஜிங்காரோ பீரும், ஒரு சிக்கன் பிரியாணியும் வாங்கிட்டு போனேன்னு வைச்சுக்கோ அப்படியே ஆஃப் ஆகிடுவான்.அப்படியே மப்புல அவன் வாயை கிண்டி இன்னும் கொஞ்சம் மேட்டரு தேத்திக்கிட்டு வா.. அடுத்த பதிவுக்கு யூஸாகும்..

யூ.கே: இப்போ பிரச்சினை ஜமீன் இல்லை.. புதுசா இன்னொண்ணு...

கே.கே: என்னதாண்டா பிரச்சினை.. விவரமா சொல்லித் தொலைடா..

யூ.கே: நம்ம வலைப்பூல கேப்டன் படத்தை வைச்சு காமெடி பண்ணியிருக்கோம்னு அவங்க கட்சிக்காரங்க நாளைக்கு தீவுத்திடல்ல கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போறாங்களாம்.

கே.கே: சரி விடு அதுக்கு முன்னாலேயே நம்ம ஒரு பதிவைப்போட்டு நம்ம தரப்பு நியாயத்தை சொல்லிடலாம்.

யூ.கே: அப்புறம் நம்ம வலைப்பூக்கு ஆங்கிலத்துல தலைப்பு வைச்சிருக்கோமாம். அதுவுமில்லாமல் ஒரு வெளிநாட்டு மதுபானத்தை வேற பெருமையா சொல்ற மாதிரி எழுதறோமாம்.அதனால் உடனடியா வலைப்பூவையே பிளாக்கர்ல இருந்து தூக்கணுமாம்..

கே.கே: இப்படியெல்லாம் யாருடா சொன்னாங்க?

யூ.கே: நம்ம மருத்துவர் ஐயாதான்..

எதிர்முனை உடனே துண்டிக்கப்படுகிறது.

டேய் தம்பி.. உன்னைத்தான்...


ஜமீனுடனான அனுபவங்களை யூ.கே தொடருகிறார்

ஜமீனின் தைரியத்துக்கு உதாரணமான நிகழ்ச்சி..


அது காலேஜ் படைப்பின் கடைசி வருடம். விதியின் சதியால் நானும், ஜமீனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அது ஒரு வாரஇறுதியின் மாலைநேரம்.நானும் ஜமீனும் வழக்கமான டீக்கடையில் அமர்ந்து கிங்ஸ் புகைத்துக் கொண்டிருக்க, அப்போது ஒரு ஜுனியர் மாணவன் டீக்கடையோடு இணைந்திருந்த பைக் ஸ்டேண்ட்டில் பைக்கை நிறுத்த வந்தான்.அவன் ஜமீன் டிபார்ட்மெண்ட்(முக்கியமாக ஜமீனுக்கு ஜூனியர்). அவன் நாங்கள் உட்கார்ந்திருந்ததை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. யாரோ அமர்ந்திருப்பதுபோல் அவன் தான்வந்த வேலையைப் பார்க்க ஸ்டேண்டினுள் சென்றான். எனக்கு அதுகூட பெரிதாக தோன்றவில்லை. அவன் எங்களைக் கடக்கும்போது ஜமீனைப் பார்த்து ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டுச் சென்றான். என்னத்தான் அவன் ஜமீனைத்தான் பார்த்தாலும் கூட அது என்னையும் அவமானப்படுத்தியது போலிருந்தது.(பின்னே இருக்காதா.. ஜமீனும்,நானும் அவ்வளவு நெருங்கிய நண்பர்கள் அல்லவா?)

ஜமீனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இதோ:

நான்: ஜமீன்! அவன் உங்க ஜுனியர்தானே..

ஜமீன்: ஆமாடா.. அதுக்கென்ன..

நான்: இல்லை.. சீனியர் ஒருத்தன் இங்கே உட்கார்ந்திருக்கே.. கொஞ்சம்கூட மரியாதை கொடுக்காமல் அவன்பாட்டுக்கு போறான்?

ஜமீன்: இப்ப அதுக்கென்னடா பண்ணலாம்கிறே?

நான்: இல்லை.. நானாவது வேறு டிபார்ட்மெண்ட். பரவாயில்லைன்னு விட்டுடலாம். ஆனால் நீ அவனோட டிபார்ட்மெண்ட் சீனியர். உன்னையே மதிக்காம போறானே?

ஜமீன்: ம்.. ம்.. (புகையை ஆழமாக இழுத்து விட்டபடியே ஏதோ தீவிரமாக யோசிக்கிறார்)

(இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த மாணவன் என்னத்தான் ஜுனியர் என்றபோதிலும் கூட வயதில் எங்களைவிட மூத்தவன்.பார்ப்பதற்கும் நல்ல வாட்டசாட்டமாக இருப்பான்.காலேஜ் ரவுடிகள் கூட்டத்தில் அவனும் இருந்ததாக ஞாபகம்.சாதாரணமாக பேசும்போதே கொஞ்சம் திமிருடன் பேசும் டைப். எதற்காக இவ்வளவு பில்ட்-அப் என்பது பின்னால் உங்களுக்கே தெரியும்)

இப்போது அவன் எங்கள் முன்னால் திரும்பியபடி நின்று கடைக்காரரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, ஜமீன் அந்த ஜுனியரை அழைக்கிறான்.

ஜமீனுக்கும், ஜூனியர் மாணவனுக்கும் நடந்த உரையாடல் இதோ:

ஜமீன்: டேய்!...

ஜுனியர்: (காதில் வாங்காமல் தொடர்ந்து கடைக்காரரிடம் பேசுகிறான்)

ஜமீன்: டேய் தம்பி.. உன்னைத்தான்...

ஜூனியர்: (இந்தமுறை திரும்பிப்பார்த்து ஜமீனைத்தவிர எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிவிடுகிறான்)

இதைக்கண்ட நான் ஜமீனைப் பார்த்து ஏளனப் புன்னகை பூக்க, அவ்வளவுதான் ஜமீனுக்கு கோபம் வந்துவிட்டது.

ஜமீன்:டேய்.. உன்னைத்தாண்டா.. காது செவிடா?

ஜூனியர்: யாரை என்னையா கூப்பிட்டே?

(அவன் ஜமீனை ஒருமையில் கூப்பிட்டபோதே எனக்குள் எங்கோ பல்பு எரிய ஆரம்பித்தது.சரி நமக்கு எதுக்கு வம்பு என பெஞ்சின் இன்னொரு முனைக்கு மெதுவாக நகர ஆரம்பித்தேன்)

ஜமீன்: ஆமாண்டா.. உன்னைத்தான் கூப்பிட்டேன்.

ஜூனியர்: என்னது டா.. வா? என்னைத் தெரியுமா உனக்கு? இல்ல உன்னைத்தான் எனக்கு தெரியுமா? என்றபடியே லேசாக முறைத்துப் பார்த்தான்.

ஜமீன்: ஏண்டா.. சீனியருக்கு மரியாதை கொடுக்கமாட்டியா? நீ பாட்டுக்கு போறே?

ஜூனியர்: யார்டா சீனியர்? எதை வைச்சு சொல்றே?

ஜமீன்: நான்தாண்டா.. இப்பத்தான் டிபார்ட்மெண்டுக்குள்ளேயே வந்திருக்கே.. அதுக்குள்ளே இவ்வளவு திமிரா உனக்கு?

ஜுனியர்: டேய் தம்பி.. நீ சீனியர்னா அதைக் காலேஜோட வைச்சுக்கோ.. தேவையில்லாமல் பேசிக்கிட்டிருக்காதே..

ஜமீன்: (கொஞ்சம்கூட அசராமல்) உன்னையெல்லாம் முதல்நாளே தட்டி வைச்சிருக்கணுண்டா.. இவ்வளவு நாள் விட்டுவைச்சேன் பாரு என்னைச் சொல்லணும்..

ஜுனியர்: சின்னப்பயலா இருக்கியேன்னு பார்க்கறேன்.. ** ஒரு அடிக்கு தாங்குவியாடா நீ..

ஜமீன்:டேய் என்னைப்பத்தி உனக்கு தெரியாது.. காலேஜீக்குள்ளே வந்துபாருடா நீ வைச்சுக்கறேன்..

ஜுனியர்: என்னடா செய்யப்போற.. இங்கேயே செய்டா பார்க்கலாம்.

ஜமீன்: வேண்டாம் தம்பி.. ஓவரா போறே.. நல்லாயில்லை..

ஜுனியர்: மறுபடியும் தம்பி கிம்பின்ன அடுத்த வார்த்தை பேச வாயிருக்காது ஆமாம்..

உடனே தம்மை கீழேபோட்டு வேகமாய் எழுந்தவன், படாரென அவனை அடிக்க கையை ஓங்க, பதிலுக்கு அவனும் ஓங்க நிலைமை மோசமாக ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டீக்கடைக்காரர் இடையில் புகுந்து கெஞ்சிக் கேட்டதன் பேரில் ஜமீன் அடிவாங்காமல் தப்பித்தார்.

அவன் ****** ,****** என திட்டியபடியே அங்கிருந்து நகன்றபின் மெதுவாக ஜமீன் அருகில் சென்றேன்.

(இவ்வளவு நேரம் என்னடா செய்தேன்னு யோசிக்கிறீங்களா? நான்பாட்டுக்கு ஆர்வக்கோளாறுல களத்தில குதிச்சிருந்தேன்னா ரத்தம் பார்க்காம அடங்க மாட்டேனப்பு.. ஆனால் அந்த ஜூனியரை பார்த்தால் எனக்கு ஏனோ சண்டை போடவே தோணலை)
(ஸ்.... அப்பாடா... நம்ம கேரக்டரை நியாயப்படுத்திக்க என்னவெல்லாம் பில்ட்‍‍அப் கொடுக்க‌ வேண்டியிருக்கு... முடியலடா சாமி...)

நான்: ஏன் ஜமீன்.. எதுக்கு இப்படி நடந்துக்கிட்டே? என்றேன் ஒன்றுமே தெரியாதபடி..

ஜமீன்: *********** அவனுக்கு இருக்குடா.. திங்கட்கிழமை காலேஜிக்குள்ளே வரட்டும் வைச்சுக்கறேன்..

நான்: சரி விடுடா ஜமீன்...

ஜமீன்: இல்லடா நம்ம கடையாச்சேன்னு பார்த்தேன்.. வேற எங்கேயாவது சிக்கியிருந்தான்னா அவனை *******

நான் இன்னும் ரெண்டு கிங்ஸை வாங்கி பற்றவைத்து ஜமீனின் கோபத்தை குறைத்தேன்.

ஜமீன்: மாப்ளே....

நான்: சரி ஜமீன்.. புரியுது.. வழக்கம்போல இங்கே நடந்ததை யாரிடமும் சொல்லவேண்டாம்.. அதானே.. கவலையை விடு.. யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்.

அதன்பின் முதல்முறையாக இப்போதுதான் அந்தவிஷயத்தை பற்றி வெளியே சொல்கிறேன்


நான் சொல்லவந்த விஷயம் ஜமீனின் தைரியத்தைப் பற்றி.. கரெக்ட்.. ஆங்.. அது காலேஜீம் கிடையாது.. சப்போர்ட்டுக்கு ஆளும் கிடையாது. எதிர்த்து நிக்கறவன் ரெண்டு அடி அடிச்சுட்டானா திருப்பி அடிக்கவும் முடியாது. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் எதையும் யோசிக்காமல் நம்ம தலை ஜமீன் கைப்புள்ள வடிவேலு ரேஞ்சுக்கு களத்தில குதிச்சிடுவாரு.. ஆனால் அடிமட்டும் வாங்காமல் எஸ்ஸாகிடுவாரு.. அதான் ஜமீனோட திறமை..
ஜிங்காரோ ஜமீன்

வ.வா.சங்கத்துக்கு ஓர் எச்சரிக்கை...

இதுவரை வெளிவந்திருக்கும் பதிவுகளினால் கடும் கோபமுற்ற சிலர் வன்முறையைக் கையாண்டும் கூட, நாங்கள் சிறிதும் அஞ்சாததால் இப்போது வ.வா.சங்கத்தின் துணையோடு எமது வலைப்பூ தளத்தை அத்துமீறி கைப்பற்றியுள்ளனர். எனினும் நமது நண்பர்களின் உதவியால் வலைப்பூ மீண்டும் சீர் செய்யப்பட்டது. அதனாலேயே இரு நாட்களாக இந்த சிறு தடங்கல். மேலும் எங்கள் வலைப்பூவிற்கு எதிராக உலகமெங்கும் கடும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றனன. அது தொடர்பான செய்தியை இங்கே காணலாம்.மேலும் ஜமீன் எங்களுக்கு எதிராக மான நஷ்டவழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் ஜமீனின் கதையை இப்போது தொடர முடியவில்லை. மாற்று ஏற்படாக ஜமீனின் நெருங்கிய நண்பரும், காலேஜ் பெருசுமான மச்சியின் மொக்கை வரலாறு அடுத்த பதிவிலிருந்து தொடங்கும்.

ஏன் இந்தப் பிரச்சினையில் வ.வா.சங்கத்தை இழுக்கிறோம் எனில், தலை ஜமீனுக்கு பிளாக் என்றால் என்ன? என்பதையே இரு நாட்களுக்கு முன்னர்தான் தெரிந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகையால் இது ஒரு கூட்டுசதி என உறுதியாக அறியமுடிகிறது.
மேலும் 2 நாட்களூக்கு முன் ஜமீனை வ.வா.சங்கத்தில் பார்த்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

பதில் தெரியாத ஒரு கேள்வி...

ஜமீனுடனான தனது அனுபவங்களை பற்றி Mr.யூ.கே தொடர்கிறார்:

அட.. இன்னும் முழுசா ரெண்டு பதிவுகூட போடலை அதற்குள் இந்தியா ஆஸ்திரேலியா செகண்ட் பைனல் ரேஞ்சுக்கு பரபரப்பு தொத்திக்கிச்சே.. எல்லாம் எதிர்பார்த்ததுதான்.. சரி நம்ம மொக்கையை தொடருவோம்.

ஜமீன்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா தலைக்கு தாழ்வு மனப்பான்மைங்கற விஷயம் கடுகளவுக்கு கூட கிடையாது. இது ஜமீனை நக்கல் பண்றதுக்காக சொல்லலை. சத்தியமான உண்மை. எனக்கு ஜமீன் அறிமுகமான முதல் நாளிலிருந்து இன்றுவரைக்கும் தனது உயரத்தைக் குறித்து கவலைப்பட்டதோ அல்லது அதைவைத்து மற்றவர் ஜமீனை கிண்டல் செய்ததாகவோ ஒரு நிகழ்ச்சி கூட கிடையாது என உறுதியாக கூறமுடியும்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது. நம்ம கே.கே தன் பதிவுல சொன்ன விஷயம் இது. இது நூத்துக்கு நூறு உண்மை.


ஏன் சொல்றேன்னா எங்க காலேஜ்ல மச்சின்னு ஒருத்தர் இருந்தார். அவர் வயசுக்கு அவனவன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பெற்று வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். ஆனால் மச்சியோ அந்தவயதில் எங்களுடன் காலேஜில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு படிப்பின்மேல் தீராத ஆர்வம்(?). சரி விஷயத்துக்கு வருவோம்.காலேஜில் ரவுடிகளாக வலம்வந்த சில மாணவர்கள் கூட மச்சியை கண்டால் மரியாதையுடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு நழுவிவிடுவர். இப்படிப்பட்ட மச்சியை ஜமீன் அழைப்பது யோவ் பெருசு! என்றுதான். அதுவும் உ.பா துணையுடன் இருக்கும் நேரங்களில் அன்புடன் வாடா,போடா எனவும் அழைப்பதுண்டு. மச்சி வயசு என்ன? நம்ம எப்படி? இந்த மாதிரியெல்லாம் ஜமீன் கூச்சப்பட்டு பார்த்ததேயில்லை. அந்த அளவுக்கு ஜமீன் நட்புக்கும், நண்பர்களுக்கும் மரியாதை(?) கொடுப்பவர்.

அதேபோன்று ஜமீனுக்கு தைரியம் ரொம்பவே அதிகம் என பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்குப் பின் நானே ஜமீனின் தைரியத்தை பலரிடம் பரப்பினேன். அந்த இனிமையான நிகழ்வை இப்போது நேரமில்லாத காரணத்தால் அடுத்த பதிவில் கண்டிப்பாக பதிக்கிறேன்.

ஒருமுறை ஜமீனிடம் டீக்கடையில் பேசிக் கொண்டிருக்கும்போது "ஜமீன்! உனக்கு எதுக்கு ஜமீன் அப்படின்னு பெயர் வந்தது? யார் வைச்சாங்க?" என ஆவலாகக் கேட்டேன். உடனே ஜமீன் "அதுவா மச்சி! ஒரு கிங்ஸ் வாங்கு சொல்றேன்.. என்றார். நானும் செலவைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த காரணத்தை அறியும் ஆவலில் கிங்ஸ் வாங்கி கொடுத்தேன். பற்றவத்து புகைத்த ஜமீனைப் பார்த்து, "ஜமீன் நான் கேட்டது?" என்று ஞாபகப்படுத்த "ஸ்ஸ்ஸ்... தம்மடிக்கும்போது குறுக்கே பேசக்கூடாது.. அசிங்கமா இல்லையா அண்ணனுக்கு.." என்ற ஜமீன் "தம்"மை தொடர்ந்தார். எல்லாம் நேரம்டா மகனே! என்று மனதுக்குள் நினைத்தபடியே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன்.கிங்ஸ் எண்ணிக்கை மட்டும் 1..2..3.. என பழைய இந்திய அணியின் ஸ்கோர்போர்டு போல் தொடர எதிர்பார்த்த பதிலைத்தான் காணோம். சரி.. இதற்குமேலும் வெயிட் செய்தால் கடைசியாக பஸ்ஸிக்கு பைசா இல்லாமல் நடந்துதான் ரூமுக்கு போகவேண்டுமென்ற யதார்த்த நிலை உறைக்க "சரி ஜமீன் நீ யோசிச்சு அப்புறமா சொல்லு.. எனக்கு நேரமாச்சு கிளம்பறேன்.." என்று நழுவினேன்.

(ஆனால் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரைக்கும் அந்தக் கேள்விக்கான பதில் ஜமீனிடமிருந்து வரவில்லை.யார் மூலமாகவாவது இந்தப் பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டு உலகத்தின் ஏதோ ஒரு மூலையிருந்து படித்துவிட்டு அந்தக் கேள்விக்கான பதிலை ஜமீன் விரைவில் சொல்லுவார் என்ற நம்பிக்கையுடன் யூ.கே வாகிய நான் இப்பதிவை இத்தோடு முடிக்கிறேன்)

ஜமீனுடனான மேலும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். - யூ.கே

ஏண்டா.. வெட்கமாயில்லை உங்களுக்கெல்லாம்? சித்தப்பூ மீண்டும் டென்ஷன்...

வலைப்பதிவர்களான நண்பர்கள் மூவரும் கூடியிருக்க, போனில் வந்த கொலைமிரட்டல் குறித்து விவாதம் ஆரம்பிக்கிறது.


Mr.கே.கே: நம்ம எதிர்பார்த்த மாதிரியே எதிர்ப்புகள் வர ஆரம்பிச்சுடுச்சு.. அதைப்பற்றி பேசத்தான் இந்த அவசரக்கூட்டம்
Mr.யூ.கே: ஆமாம். கே.கே வுக்கு வந்த அந்த போன்காலை நானும் அட்டெண்ட் செய்தேன்.கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினான் அந்த மர்ம நபர்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன சொல்றீங்க.. பெயரைக்கூட சொல்லாமல் மிரட்டிய அவனுக்குப் போய் பயந்துக்கிட்டு நிறுத்திடலாம்கிறீங்களா?
Mr.கே.கே: இல்லை.. அப்படி சொல்லலை. இதுவரை வந்த பதிவுகளுக்கு இந்த மிரட்டல் கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது.
Mr.என்.எஸ்: கே.கே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க.. இதுவரைக்கும் வெளியாகியிருக்கும் பதிவுகளில் நீயும்,யூ.கே வும் சும்மா பிள்ளையார் சுழிதான் போட்டிருக்கீங்க.. அப்படி ஒண்ணும் பெருசா ஏதும் எழுதிடலை. இதுக்கே இப்படி யோசிச்சிங்கன்னா எப்படி? எதுக்கு சொல்றேன்னா நான் களத்தில் இறங்கி பதிவுமட்டும் போட்டேன்னா பிளாக்ஸ்பாட்டே சும்மா அதிரும் தெரிஞ்சுக்கங்க.. நமக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் ஒத்துவராது.நடந்ததையெல்லாம் புட்டுபுட்டு வைப்பேன் தெரியுமில்ல..
Mr.யூ.கே: இல்லை. இப்படியெல்லாம் நடக்கும்னு எதிபார்த்ததுதான். இருந்தாலும்..
(என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போதே மொபைல் ஒலிக்க லைனில் வருகிறார் பருத்திவீரன் சித்தப்பூ.விஷயத்தை சொல்லி ஸ்பீக்கர் போனை ஆன் செய்து மேஜையில் வைத்தவுடன் வைப்ரேட் மோடில் வைக்காமலேயே போன் அதிர ஆரம்பிக்கிறது. அந்தளவுக்கு சித்தப்பூ டென்ஷனில் எகிறுகிறார்)
சித்தப்பூ(போனில்):
ஏண்டா எவனோ ஒரு பன்னாடைப் பய ஏதோ பேசினான்னு பதிவு போடறதை விட்டுட்டு, இப்படி மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கீங்களே? வெட்கமாயில்லை உங்களுக்கெல்லாம்?
Mr.கே.கே: அதில்லை சித்தப்பூ.. அவன் பேசின தோரணையை பார்த்தா கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கு.. அதான்...
சித்தப்பூ(போனில்): டேய் அந்த ** எங்கயாவது 1 ரூபாய் செல்லாத காசை கீழே கண்டெடுத்து இருப்பான்.அதுக்கு பீடி கூட வாங்க முடியலையேங்கற கடுப்பில பப்ளிக் பூத்துலேயிருந்து போனை போட்டு ஒரு அல்ப ஆசைக்கு பேசியிருப்பான்.அதைப்போய் ஒரு விஷயம்னு உட்கார்ந்து பேசறீங்களேடா.. அதுவுமில்லாமல் யூ.கே. சொன்னதை வைச்சுப் பார்த்தா அந்த **க்கு பிளாக்குன்னா என்னான்னே தெரியலை.. இதுகூட தெரியாத ** பேசினான்னு பொழப்பை விட்டுட்டு மீட்டிங்காம் மீட்டிங்கு.. ஆகற வேலையைப் பாருங்கடா.. அவன் 1 ரூபாய்க்கு பேசினான்னு என்னை 20 ரூபாய்க்கு எஸ்.டி.டி போட வைச்சுட்டீங்களேடா.இனிமேல் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு போனைப் போட்டீங்க தொலைச்சிடுவேன்.. தெரிஞ்சுக்கங்க.. என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது.இனிமேல் தினமும் ரெண்டு பதிப்பு போட்டே ஆகணும் ஞாபகம் வைச்சுக்கங்க.. என்றபடியே லைனை கட் செய்கிறார்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன செய்யலாம்?
Mr.கே.கே: அதான் சித்தப்பூவே சொல்லிட்டாருல்ல.. வழக்கம்போல நம்ம வேலையை தொடர வேண்டியதுதான்..
Mr.யூ.கே: சரி.. நம்ம பசங்கதானே.. கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்னு பார்த்தால் விட மாட்டேங்குறானுங்க. நாளையிலிருந்து புது வேகத்தோடு களமிறங்கி பரபரப்பான பதிவுகளை போடணும்.. ஓ.கே..
Mr.கே.கே வும் என்.எஸ் ஸீம் ஒருமித்த குரலில் ஓ.கே என்றுசொல்ல மீட்டிங் இனிதே முடிவடைகிறது.

கொலைமிரட்டலுடன் எழுதிய பதிவு

ஜமீனுடனான தனது அனுபவங்கள் பற்றி Mr.கே.கே சொல்வது:

நம்ம யூ.கே சொன்ன மாதிரிதான் எனக்கும் ஜமீனுடனான முதல் சந்திப்பும். பார்ப்பதற்கு ஸ்கூல்பையன் மாதிரி ஒரு தோற்றம். ஆனால் அந்த முகத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத ம.பொ.சி மீசை என பெரும் காமெடியனாய் காட்சியளித்தார்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது.

காலேஜில் அவரது உயிர் நண்பர் ஏழரையடி ஏகாம்பரத்துடன், நாலரையடி ஜமீன் இனைந்து கூச்சப்படாமல் (ரொம்பவே கஷ்டப்பட்டு) அவரின் தோளில் கையைப் போட்டவாறு தம் அடிக்க செல்லும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

ஜமீனிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா அவரோட ஆளுமைத்திறன். அது எப்படின்னா ஹாஸ்டல்ல இருந்து 4பேர் சேர்ந்து கடைக்கு போனாங்கன்னா கூட சேர்ந்துக்குவார். அங்கே கடையில் நாட்டாமை ரேஞ்சுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களை பார்த்து ஒரு அதிகார தோரணையோடு இரு விரல்களை V வடிவில் சமிக்ஞை செய்து தம்மை வாங்கிக்கொண்டு வந்து கையிலே தரச்சொல்வார். ஆனால் நமது நண்பர்களோ ஏதும் அறியாதவர்கள் போல் வந்த வேலையைக் கவனிக்க, கடைசியில் நம்ம தலை "பொல்லாதவன்" கருணாஸ் ரேஞ்சுக்கு "ஏ நீ வாங்கேன்..ஏ நீ வாங்கேன்.." என்று கெஞ்சியும் கூட ஒன்றும் நடக்காததால் கடைசியில் தானே வாங்கி அடித்தாலும் கூட கடைசி வரைக்கும் தனக்கே உரிய கெத்தை விட்டுத்தராமல் புண்பட்ட நெஞ்சை சூனாப்பானா வடிவேல் ரேஞ்சுக்கு புகையைவிட்டு ஆத்துவார்.

(இதோ இப்போது இந்தப் பதிவை டைப் செய்துக் கொண்டிருக்கும்போது கூட மர்ம நபர் ஒருவர் இதுவரை வெளியான பதிவுகளை நீக்குமாறும், இனியும் பதிவுகளைத் தொடராமல் இருக்கும்படியும் மீறினால் கூலிப்படையை ஏவி தாக்கப் போவதாகவும் சற்று முன்னர்தான் டெலிபோனில் கொலைவெறியுடன் பேசினார். ஆனால் பாவம் அந்த முகம் தெரியாத நண்பருக்கு தனது மிரட்டல் உரையாடல முழுவதும் பதிவு செய்யப்படும் என தெரிய வாய்ப்பில்லை. வலைப்பூ நண்பர்களுக்காக அந்த டெலிபோன் உரையாடல் இதோ முழுமையாக.)

Mr.கே.கே: ஹலோ.....
ம.நபர் : நான் யாருங்கறது இருக்கட்டும்.. ஏதோ பிளாக்கெல்லாம் எழுதறீங்களாமே?

Mr.கே.கே: என்ன பிளாக்குங்ண்ணா.. புரியலையே..

ம.நபர்: ஏ ******* ஜிங்காரோங்கற பேருல ஏதோ எழுதறியாமே?

Mr.கே.கே: ஜிங்காரோவா? என்ன சொல்றீங்க? சத்தியமா புரியலை..

ம.நபர்: எல்லாம் எனக்கு தெரியும் தம்பி.. சொல்லவேண்டியவங்க சொன்னாங்க..

Mr.கே.கே: யாருண்ணா? என்ன சொன்னாங்க?

ம.நபர்: கடைசியா நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன். மவனே ஜிங்காரோ ஜமீன்ங்கற பேருல ஏதாவது எழுதுனீங்கண்ணு தெரிஞ்சது தொரத்தி தொரத்தி அடிப்பேன். மீறி எழுதுனேன்னா அடுத்த பதிவுபோட அந்த கை இருக்காது தெரிஞ்சுக்கோ.. டேய் ** இன்னொருத்தன் இருப்பானே? போனை அவன்கிட்ட குடுடா..

(Mr.கே.கே சற்றே உதறலெடுத்தாலும் கூட சமாளித்து பேசியபடி Mr.யூ.கே விடம் போனை தருகிறார்.Mr.யூ.கேவுக்கும் உள்ளுக்குள் உதறலெடுத்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுகிறார்)

ம.நபர்: என்னடா ஏதோ பிளாக்கெல்லாம் எழுதறீங்களாமே?

Mr.யூ.கே: பிளாக்குன்னா என்னங்ண்ணா? சத்தியமா எனக்கு தெரியலை.. முதல்ல பிளாக்குன்னா என்னன்னு சொல்லுங்க.. மேற்கொண்டு பேசுவோம்.
( இதை கேட்டவுடன் சட்டென்று அமைதியான எதிர்முனை அப்படியே உரையாடலை துண்டிக்கிறது)

இருந்தபோதும் நாங்கள் ஆரம்பத்திலேயே கூறியபடி அஞ்சாநெஞ்சன்களான இந்த வெட்டிப்பசங்க எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம் என கூறிக்கொள்கிறோம்


பின்குறிப்பு: மேற்கண்ட கொலைமிரட்டல் குறித்து மற்ற நண்பர்களுடன் விவாதித்து எடுக்கப்படும் முடிவு விவரமாக அடுத்த பதிவில் -Mr.கே.கே.

எழுச்சி கவிஞரின் நச் கவிதை..

ஜமீனுடனான தனது அனுபவங்கள் பற்றி Mr.யூ.கே சொல்வது:

காலேஜ் சேர்ந்து முதல்வருடம் விடுமுறையில் நல்லா வெட்டியா சுத்திட்டு இரண்டாமாண்டில் காலெடுத்து வைத்தோம். அப்போது எங்களுக்கு தெரியாது. இனிமேல் நாங்கள் இப்படியொரு அற்புத(ப)மான ஜீவனுடன் மீதி காலத்தை ஓட்ட வேண்டுமென்று. அது வேறு யாருமில்லை எங்க தலை ஜமீன்தான். தலையைப் பத்திச் சொல்லணும்னா ஸ்கூல்பையன் மாதிரி ஒரு தோற்றம். பால்வடியும் முகம். ஆனால் அது பால்வடியும் முகமில்லை.. ஜிங்காரோ பீர் வடியும் முகம்னு போகப்போகத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். அந்த முகத்துக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் ஒரு கட்டை மீசைன்னு அம்சமா இருப்பார்னா பார்த்துக்கங்களேன்..

ஜமீனை முதன்முதலில் பார்த்த நம்ம காலேஜ் கவிஞர் தனக்கு தோன்றிய அந்த அற்புத வரிகளை கவிதையாக கொட்டியிருக்கார்.அவரது அனுமதியுடன் அந்த அற்புதமான கவிதை உங்கள் பார்வைக்கு..

ஒரு
கிங்ஸ்
கிங்ஸ்
புகைக்கிறதே....
- எழுச்சி கவிஞர் ஏழரையடி ஏகாம்பரம்

நம்ம கவிஞர் ஏழரையடி ஏகாம்பரம் சொன்னதுபோல் இப்படிதான் முதன்முதலில் காட்சியளித்தார் நம்ம தலை ஜமீன். முதலில் பார்த்ததும் சரி.. ஏதோ ஒரு ஸ்டூடண்டின் தம்பி போல...அதான் ஹாஸ்டல் ரூமில் உட்கார்ந்திருக்கான்னு நினைச்சேன்.ஆனால் அப்புறம்தான் தெரிஞ்சது.. அவர்தான் நம்ம தலை ஜமீன் அப்படிங்கறதும், எங்க எல்லோரையும் விட ரொம்ப உயர்ந்தவர்(வயசுல மட்டும்) அப்படிங்கறதும். வேற வழியில்லாமல் தலையை எங்கள் நண்பர் குழுவில் இணைச்சுக்கிட்டோ ம்.ஸாரி.. ஸாரி.. ரொம்ப பெரிய மனசு பண்ணி ஜமீன்தான் எங்களை அவரோட நண்பர்களா ஏத்துக்கிட்டார்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

ஜமீனுடனான இவ்வளவு கேவலமான அறிமுகத்துக்கு அப்புறம் அவருடன் தொடர்ந்து நடந்த,நடக்கும் இனிமையான நிகழ்வுகளை(கருமம்டா சாமி...) இனிவரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.

எந்த டி.வி. டா நீ.....பேத்துருவேன்....சித்தப்பூ டென்ஷன்

கேள்வி: உங்களோட இந்த முயற்சிக்கு பத்திரிக்கை,டிவி நிருபர்கள் சார்பாக
வாழ்த்துக்கள்.

பதில்:
நன்றி

கேள்வி:
உங்களைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்?

பதில்:
நாங்க நாலு பேரு. வெட்டிப்பசங்க.. நான் கே.கே. இவன் என்.எஸ்.அவன்பருத்திவீரன் சித்தப்பு.ஏதோ எல்லாரையும் மாதிரி காலேஜ் போனோம்படிச்சோம்னு இல்லாம எப்பவும் வெட்டியா சுத்திக்கிட்டு, மொக்கையைப்போட்டுக்கிட்டு திரிஞ்சோம்.இப்படியே விட்டால் அந்த மொக்கையெல்லாம்எங்களோடேயே அழிஞ்சுடுமேங்கற கவலையில் தமிழ்கூறும் நல்லுலகிற்குஎங்க மொக்கைகளை எல்லாம் எடுத்துக்கூற ஆசைப்பட்டதோட விளைவுதான்இந்த வலைப்பூ.

கேள்வி: நீங்க நாலு பேர்னு சொன்னீங்க. ஆனால் மூணுபேரை மட்டும்தானேஅறிமுகம் செய்றீங்க. அப்போ யார் அந்த நாலாவது நபர்?

பதில்: நம்ம தமிழ்நாட்டு அரசியலையே எடுத்துக்குங்க. கூட்டணியில்இருந்துக்கிட்டே ஆட்சியில் பங்கெடுத்துக்காம சிலர் வெளியிலிருந்து ஆதரவுதருவதில்லையா? அதுபோல்தான் அந்த நான்காம் நபர். இந்த வலைப்பக்கத்தைப்பொறுத்தவரைக்கும் இதன் வளர்ச்சியில் அவர் ஒரு முக்கியமான நபர். ஆனால்தான் யாரென்ற அடையாளத்தை எப்போதும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்.

கேள்வி: அந்த நான்காவது நபர் யார்னு படிக்கிறவங்களால் கண்டுபிடிக்கமுடியுமா?

பதில்: நிச்சயமாக முடியாது. அவர் யார் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்தரகசியம்.

கேள்வி: அவர் யாராயிருப்பார்னு கண்டுபிடிக்க ஒரு சின்ன க்ளூ தாங்களேன்.. பிளீஸ்..

பதில்: அவர் Mr. ஊமைக் குசும்பன்னு வைச்சுக்கங்களேன். இதற்குமேலஅவரைப்பத்தி இப்ப எதுவும் சொல்ல முடியாது.

கேள்வி: உங்க காலேஜ் ஃப்ரண்ட்ஸ் மேல இருக்கிற தனிப்பட்ட விரோதங்கள்காரணமாகத்தான் நீங்க இந்த வலைப்பதிவை ஆரம்பிச்சு அவங்களைப் பற்றிஎழுதப்போறதா சொல்றாங்களே?

பதில்: யாருடா நீ ....எந்த டி.வி. டா நீ.....பேத்துருவேன்....(சித்தப்பூ டென்ஷனாக‌..) (மீடியாக்காரர்களும் பதிலுக்கு எகிற, நிலைமை அடிதடிரேஞ்சுக்கு போகிறது.இடைப்புகுந்த கே.கே. அனைவரையும் அமைதிப் படுத்திஅவரே பதிலளிக்கிறார்.)

பதில்: தனிப்பட்ட விரோதம்னு குறிப்பிட்டு சொல்ற அளவுக்கு எதுவும்கிடையாது.ஏதோ எங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை பகிரங்கமாகவெளியுலகுக்கு சொல்றதுல ஒரு அல்ப சந்தோஷம்.. அவ்வளவுதான்...

கேள்வி: நீங்க இப்படி உண்மைகளை அப்பட்டமாக வெளியிடப் போவதால்உங்கள் நண்பர்கள் பலரின் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமே?

பதில்: ஒண்ணு நீங்க கவனிக்கனும். நாங்க சொல்லப்போற சம்பவங்களீல்யாரோட பெயரையும் குறிப்பிடப் போவதில்லை.சம்பந்தபட்டவங்களையும்ஜமீன்,பரமக்குடியார்,மச்சி,பாண்டு, ஏழரையடி என்று அவங்களுக்குன்னுஇருக்கிற பிரத்யேக பெயரைத்தான் உபயோகப்படுத்தப் போகிறோம்.இதனால்யாருக்கும் கோபம்வர வாய்ப்பில்லைன்னு நினைக்கிறோம்.

கேள்வி: இந்த பெயரை நீங்க தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் என்னன்னுதெரிஞ்சுக்கலாமா?

பதில்: இப்படி ஒரு ஐடியா வந்ததுமே எங்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தது(றுத)லை ஜமீன்தான்.மொக்கைராசாவா திரிஞ்ச எங்க தங்கதலைவர், சிங்கக்குட்டி ஜமீன்(பின்பாதி உண்மை) பெயரைத்தவிர வேறு எத வச்சாலும்எடுபடாதுன்னு தோணுச்சு.

(பின்குறிப்பு)
இந்த பெயரை நாங்க ரெஜிஸ்டர் செஞ்ச 5 வது நிமிஷமே Larry Page ம் Sergei Brin ம் (அதாங்க நம்ம கூகிள் ஃபவுண்டர்ஸ்) "இத்தனை வருஷஅனுபவத்துல இப்படி ஒரு Innovative ஆன பெயரை நாங்க கேள்விப்பட்டதேஇல்லை" ன்னு ஒரு மெயிலை போட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன்.

இங்கேதான் நாங்க‌ புதுசு.. தெற்கே எங்க‌ளுக்குதான் ம‌வுசு..

எங்கள் இனிய வலைப்பூ மக்களே... உங்கள் பாசத்துக்குரிய வெட்டிப்பசங்க முதல்முறையாக ஒரு சொந்த வலைப்பூவுடன் களமிறங்குகிறோம்.(பாரதிராஜா ஸ்டைல் மாமே..)

இவ்வளவு நாட்கள் தமிழ் வலைப்பக்க உலகில் அவ்வப்போது என்ன நடக்கிறதென்று எட்டிப்பார்த்து, ஒரு பார்பவையாளர்களாக மட்டுமே இருந்த நாங்கள் முதல்முறையாக ஒரு சொந்த வலைப்பக்கம் துணையுடன் களத்தில் குதிக்கிறோம். நாங்கள் முன்பே கூறியதுபோல் இது எங்க காலேஜ் நினைவுகளை பகிர்ந்துக்கிறது மட்டுமில்லாமல் வெட்டி மொக்கைக்கும்தான்.எங்களாலான‌ இந்த சிறிய முயற்சிக்கு வலையுலக ஜாம்பவான்களின் ஆதரவையும், வெளியிலிருந்து ஆதரவு தரும் (அவ்வப்போது எட்டிப்பார்த்து விட்டு மட்டும் செல்கிற) நண்பர்களின் ஆதரவையும் ஒருங்கே வேண்டி தாழ்மையுடன் கைகூப்பி வணங்கும்
வெட்டிப்பசங்க...

(ஏற்கனவே இருக்கிறவனுங்க குடுக்கிற இம்சையே தாங்க முடியலை.. இதுல நீங்க வேறயாடா..ன்னு யாரோ புலம்புறமாதிரி இருக்கு..) அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறோம். நாங்க இப்படி புதுசா ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்கப் போறோம்கிற நியூஸ் எப்படித்தான் வெளியே கசிஞ்சுதுன்னு தெரியலை.உள்ளூர் சன்டிவி, கலைஞர் டிவியில் ஆரம்பிச்சு பி.பி.சி, சி.என்.என் வரைக்கும் வந்து குமிஞ்சுட்டாங்க. வேற வழியில்லாமல் அவங்களுக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியதாயிடுச்சு. அந்த பேட்டி விவரங்களை விரிவாக அடுத்த‌‌ ப‌திவில் கொடுக்கிறோம்.





எங்க முதல் பதிவைப் பார்த்தாச்சுல்ல.. ஏதாவது கருத்தைச் சொல்லிட்டுப்போறது.. அதை விட்டுட்டு இப்படி முறைச்சுப் பார்த்தா என்ன அர்த்தம்?