இதற்கிடையே இதுவரை வெளியான பதிவுகளால் ஏற்பட்ட சட்ட சிக்கல்களை(!) தீர்ப்பதற்காக பொதுக்குழு கூட்டத்திற்காக கே.கே வும், என்.எஸ் ம் ஆபிஸிக்கு லீவ் போட்டுவிட்டு சித்தப்பூவை சந்திக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை STD யில் பிடித்தபோது....
யூ.கே: ஹலோ
கே.கே: சொல்றா.. அங்கே ஏதும் பிரச்சினையில்லையே...
யூ.கே: ** நீ பாட்டுக்கு சென்னையைவிட்டு ஓடினால் போதும்னு எஸ்ஸாயிட்டே.. இங்கே எந்த நேரத்துல எவன் வந்து அடிக்கப்போறான்னு தெரியாம பம்மிக்கிட்டிருக்கேன்.
கே.கே: விடுடா ஜமீன்லாம் ஒரு ஆளுன்னு பயப்படுறியே.. அதுவுமில்லாமல் உன் பேரை இதுவரைக்கும் எங்கேயும் சொல்லவேயில்லை.. அதனால் ஜமீனுக்கு நீதான் எழுதறேன்னு உன்மேல டவுட் வர சான்ஸே இல்லை.. சும்மா தைரியமா தூங்கு..
யூ.கே: அது சரிதான் மச்சி.. ஆனால் இப்போ போட்டேன் பாரு ஜுனியர் மேட்டர் பத்தி ஒரு பதிவு. அது எனக்கும்,ஜமீனுக்கும் மட்டும் தெரிஞ்ச ஒரு ரகசியம். இதைப்படிச்சா சத்தியமாய் நான் தான் எழுதினேன்னு கண்டுபிடிச்சுடுவான்..
கே.கே: டேய் யூ.கே... ஜமீன் என்ன பெரிய இவனாடா.. சரி ஒண்ணு பண்ணு.. நாளைக்கே ஜமீனை நேரிலே போய்பாரு.. முதல்ல கொஞ்சம் குதிப்பான். அப்படியே ரெண்டு ஜிங்காரோ பீரும், ஒரு சிக்கன் பிரியாணியும் வாங்கிட்டு போனேன்னு வைச்சுக்கோ அப்படியே ஆஃப் ஆகிடுவான்.அப்படியே மப்புல அவன் வாயை கிண்டி இன்னும் கொஞ்சம் மேட்டரு தேத்திக்கிட்டு வா.. அடுத்த பதிவுக்கு யூஸாகும்..
யூ.கே: இப்போ பிரச்சினை ஜமீன் இல்லை.. புதுசா இன்னொண்ணு...
கே.கே: என்னதாண்டா பிரச்சினை.. விவரமா சொல்லித் தொலைடா..
யூ.கே: நம்ம வலைப்பூல கேப்டன் படத்தை வைச்சு காமெடி பண்ணியிருக்கோம்னு அவங்க கட்சிக்காரங்க நாளைக்கு தீவுத்திடல்ல கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போறாங்களாம்.
கே.கே: சரி விடு அதுக்கு முன்னாலேயே நம்ம ஒரு பதிவைப்போட்டு நம்ம தரப்பு நியாயத்தை சொல்லிடலாம்.
யூ.கே: அப்புறம் நம்ம வலைப்பூக்கு ஆங்கிலத்துல தலைப்பு வைச்சிருக்கோமாம். அதுவுமில்லாமல் ஒரு வெளிநாட்டு மதுபானத்தை வேற பெருமையா சொல்ற மாதிரி எழுதறோமாம்.அதனால் உடனடியா வலைப்பூவையே பிளாக்கர்ல இருந்து தூக்கணுமாம்..
கே.கே: இப்படியெல்லாம் யாருடா சொன்னாங்க?
யூ.கே: நம்ம மருத்துவர் ஐயாதான்..
எதிர்முனை உடனே துண்டிக்கப்படுகிறது.
தீவுத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்
மொக்கை வகை
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
புது போஸ்ட் எதுவும் இல்லையா?
அதுக்குள்ள டயர்டாயிட்டிங்களா? :P
//புது போஸ்ட் எதுவும் இல்லையா?
அதுக்குள்ள டயர்டாயிட்டிங்களா? :P//
நிலா குட்டிக்கு ஒரு பதிலாவது சொல்லுங்க தல
டாய் தார் டப்பா தலையா ...
உனக்கு என்னடா வேணும்...
நிலா குட்டி சாக்கா வெச்சு நீ பதில் கேக்குறே......
அண்ணா நல்லா காமெடி பின்னுறீங்க. வாங்க ஜோதியில ஐக்கியமாகுங்க (பதிவர் சந்திப்பு)
ஹாய் டா செல்லம் ,
ரொம்ப நன்றி டா குட்டி... இந்த மாதிரி அல்லகை பசங்க எல்லாம் இப்படித்தான் கவுக்கணும் ..... இல்லாட்டி " ஊராமூட்டு நெயு என் பொண்டாட்டி கை " ன்னு அடுத்தவங்க கருத்துக்கள இவுனுங்க கமண்ட்ஸ் ' ல சேர்த்து போட்டுடுவானுங்க ..