சென்னை பதிவர் சந்திப்பு 8/06/08 - எங்கள் பார்வையில்..02

எங்களுக்கோ மிகவும் எதிர்பார்த்து வந்த உண்மைதமிழன் அண்ணாச்சி ஆப்செண்ட் ஆனது குறித்து கவலையாக இருந்தது.

கும்மியடிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதிஷா எழுந்து கைப்பேசியில் இருந்த கேமராவில் அனைவரையும் படமெடுக்க ஆரம்பித்தார்.அவர் ஒவ்வொருவரையும் போகஸ் செய்து புகைப்படம் எடுக்கும் விதத்தை பார்க்கும்போது சந்திப்பு முடிந்தவுடன் அப்படியே அருகிலிருக்கும் ஐஜி ஆபிஸில் கமிஷனரிடம் எல்லோரது புகைப்படங்களையும் கொடுத்து வாண்டட்(wanted) லிஸ்டில் சேர்த்துக்கொள்ள சொல்வாரோ என தோன்றியது.அதிஷாவை தொடர்ந்து பாஸ்டன் பாலாவின் நண்பர் மூர்த்தியும் டிஜிட்டல் கேமராவில் சுற்றிவந்து அனைவரையும் புகைப்படம் எடுத்து தான் அதிஷாவுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தார்.ஒருவழியாக சந்திப்பின் கருப்பொருளான அடுத்தவாரம் நடைபெறப்போகும் தமிழ்மண நிர்வாகிகளுடனான சந்திப்பில் பதிவர்கள் சார்பாக வலியுறுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஸ்டன் பாலாவும் அவர் சார்பில் த்மது கருத்துக்களை வலியுறுத்தினார்.இதனிடையே இடைப்புகுந்த வளர்மதி மற்றும் ஜ்யோவராம் சுந்தர் ஆகியோர் தமிழ்மணத்தில் தாங்கள் எதிர்கொண்ட வகைப்படுத்துதல் பிரச்சினைகளை பற்றிச் சொல்ல, பாலபாரதி குறித்துக்கொண்டார்.அடுத்து சந்திப்பின் மைய பிரச்சினையான உண்மைதமிழன் பின்னூட்ட பிரச்சினை குறித்தும், மீண்டும் பின்னூட்ட உயரெல்லை கொண்டுவருவது பற்றியும் பேச்சு திரும்பியது. அதுபற்றி எடுக்கப்பட்ட முடிவுகளை அடுத்த வாரம் தமிழ்மண சந்திப்பின்போது காண்க.

பின்னர் பேச்சு வலைப்பக்கங்கள் தற்போது எதிகொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி முக்கியமாக ஆபாச பின்னூட்டங்கள், ஆபாச தலைப்புகள் குறித்து திரும்பியது. 7:15 மணி வாக்கில் சில பதிவர்கள் கிளம்ப, மீதமிருந்த பதிவர்களுடன் பாஸ்டன் பாலா உரையாடினார். மேலும் அரைமணி கழிந்தபின்னர் பாலபாரதி சபையை கலைக்கலாமா என கேட்க, ஒருவழியாக சந்திப்பு இனிதேமுடிந்தது.அங்கிருந்து கலைந்து அருகிலிருந்த தேநீர் விடுதியில் சூடான தேநீர் விருந்து முடிவில் அனைவரிடமும் அன்புடன் விடைபெற்றோம்.

இந்த பதிவர் சந்திப்பில் முதல் முறையாக கலந்து கொண்டதில் இருந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அல்லது இனிவரும் சந்திப்புகளில் புதிதாக கலந்துகொள்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை:

சந்திப்புக்கு 2 நாள் முன்னே ஏதாவது ஒரு பதிவு போட்டுவிட்டு செல்லவும்.செமஸ்டர்ல ஓவர்நைட் படித்து எழுதுவதுபோல் தமிழ்மண உதவியுடன் முடிந்த அளவுக்கு எல்லா பதிவுகளையும் மேலோட்டமாகவாவது படித்துவிடவும். அங்கே கல்ந்துரையாடலின்போது நிச்சயம் உதவும்.

சரி ஒரே மொக்கையா போய்க்கிட்டிருக்கு. கொஞ்சம் சீரியஸா பேசுவோம்.

இது எங்களுக்கு முதல் சந்திப்பு என்றபோதும் புதியபதிவர் என வித்தியாசம் காட்டாமல் அவர்களில் ஒருவராக பாவித்து தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்திய லக்கிலுக், பாலபாரதி, முரளிகண்ணன், அதிஷா ஆகியோர்.

இதுவரை ஒன்றுகூட உருப்படியாக எழுதவில்லை என்றபோதும்கூட, நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க என ஊக்கப்படுத்திய டோண்டு ஸார், பாலபாரதி.

இந்தவாரம்தான் நீங்க ஒன்றுமே பேசலை. அடுத்தவாரம் வந்து பேசலை தொலைச்சிடுவேன் என அன்பாக மிரட்டிய பாலபாரதி.

இறுதியில் சரி ஒருதடவை போய்தான் பார்ப்போமே என்ற முடிவில் சென்ற பதிவர் சந்திப்பு இனி ஒவ்வொரு முறையும் தவறாமல் செல்லவேண்டும் என தோன்றும் அளவுக்கு நடந்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தபோதும் விடைபெறும்போது ஏதோ நீண்ட நாள் நண்பர்களை பார்த்துவிட்டு திரும்பும் உணர்வு மனதில் அருந்திய தேநீரை விடவும் சுவையாய் இருந்தது.



ஒரு சுய விளக்கம்:

இந்த பதிவர் சந்திப்புக்கு வரும்வரை எனக்கும் அதிஷாவுக்கும் அறிமுகமே கிடையாது. முந்தைய நாள் எதேச்சையாக வலைப்பக்கத்தில் பார்த்த எண்ணில் தொடர்புகொண்டஅனுபவம் மட்டுமே. மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை.அவரது பெயர்கூட சந்திப்பின் போதுதான் தெரியும்.(எங்கள் இருவரையும் வைத்து கொண்டை முடியும் இருவருக்காக இந்த விளக்கம்)


இந்தவார குட்டு:

பதிவர் சந்திப்பு சென்னையிலே, அதுவும் விடுமுறை நாளான ஞாயிறு மாலை நடந்தும்கூட தவிர்க்க இயலாத காரணங்களால் வரமுடியாதவர்களை தவிர்த்து, வராமலிருந்த மற்றவர்களுக்கு


இந்தவார பூச்செண்டு:


இப்படியொரு அருமையான சந்திப்பை ஏற்பாடு செய்த பாலபாரதிக்கும், ஏற்பாடு செய்யவைத்த பாஸ்டன் பாலாவுக்கும்.

வெளிநாட்டிலிருந்து வந்தாலும் கூட நம்ம ஊரில் சில பார்ட்டிகள் காட்டுவதுபோல் சீன் போடாமல் மாநகர போக்குவரத்து கழக பேருந்திலேயே வந்து திரும்பிய பாஸ்டன் பாலாவுக்கு.

இந்தவார கேள்வி:

சிறந்த படைப்பாளரான கென் கடைசிவரை எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தது ஏனோ?

விடுபட்டவை:

விவாதத்தின்போது டோண்டு ஸார் ஜ்யோவ்ராம் சுந்தரிடம் அவரது சமீபத்திய பதிவான காமகதைகள் பற்றி ஆர்வமாக கேட்டது.

அரசாங்கம் பட விமர்சனத்தின்போது கேப்டனின் இங்லீஷ் பேசும் ஸ்டைலை கிண்டல் செய்து, லக்கிலுக் தன்னை திமுக் ஆதரளவாளர் என மீண்டும் ஒருமுறை காட்டிக்கொண்டது.


பி.கு: சந்திப்பு குறித்து நேற்று போட்ட பதிவு வலையேற்றத்தின்போது நடந்த சிக்கலால் எங்கோ மறைந்துவிட, இன்னும் கொஞ்சம் மேட்டர் சேர்த்து பழைய பதிவை நீக்கிவிட்டு இதை பதித்துள்ளோம்.

5 பேரு ஏதோ சொல்லியிருக்காங்க‌...:

  • முரளிகண்ணன் said...
     

    \\அடுத்து சந்திப்பின் மைய பிரச்சினையான உண்மைதமிழன் பின்னூட்ட பிரச்சினை குறித்தும்\\

    தம்பி அது காமெடிக்காக சொன்னது

    \\புதியபதிவர் என வித்தியாசம் காட்டாமல் அவர்களில் ஒருவராக பாவித்து தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்திய லக்கிலுக், பாலபாரதி, முரளிகண்ணன், அதிஷா ஆகியோர்\\

    நானும் புதுப்பதிவர் தான்

    \\பதிவர் சந்திப்பு சென்னையிலே, அதுவும் விடுமுறை நாளான ஞாயிறு மாலை நடந்தும்கூட ஆப்செண்ட் ஆன சென்னை பதிவர்கள் அனைவருக்கும்.

    \\
    ஒவ்வொருவருக்கும் ஒரு கமிட்மென்ட் இருக்கும். அடுத்த சந்திப்புக்கு நீங்கள் கூட வர இயலாமல் போகலாம். பொதுவாக இப்படி கூறக்கூடாது

  • அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
     

    அன்பு ஜமீன் ,
    ம்ம்ம் நன்றாக எழுதுகிறீர்களே !
    கீப் இட் அப் .
    எனக்கும் இது போல் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தினை தூண்டி விட்டீர்கள் .
    ஆனால் பின்னூட்டம் மட்டும் போடும் பதிவர்களை அனுமதிப்பார்களா?
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர் .

  • ஜிங்காரோ ஜமீன் said...
     

    //
    ஆனால் பின்னூட்டம் மட்டும் போடும் பதிவர்களை அனுமதிப்பார்களா?
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்
    //


    நிச்சயமாக அருப்புக்கோட்டை பாஸ்கர் அனைவருக்கும் அனுமதி உண்டு. அடுத்தவாரம் அவசியம் வாங்க. சந்திப்பு குறித்த மேல்விபரங்களுக்கு பாலபாரதியின் பதிவை பார்க்கவும்

  • ஜிங்காரோ ஜமீன் said...
     

    \\அடுத்து சந்திப்பின் மைய பிரச்சினையான உண்மைதமிழன் பின்னூட்ட பிரச்சினை குறித்தும்\\

    //
    தம்பி அது காமெடிக்காக சொன்னது
    //

    முரளிண்ணா அதுவும் காமெடிக்குதான் எழுதியது. சீரியஸான மேட்டர் கடைசி 4 வரிகள்தான்.



    //
    ஒவ்வொருவருக்கும் ஒரு கமிட்மென்ட் இருக்கும். அடுத்த சந்திப்புக்கு நீங்கள் கூட வர இயலாமல் போகலாம். பொதுவாக இப்படி கூறக்கூடாது
    //

    மன்னிக்கவும்.அந்த வரிகளை மாற்றிவிடுகிறேன்.

  • ஜிங்காரோ ஜமீன் said...
     

    வருகைக்கு நன்றி கிரி. தொடர்ந்து வாங்க.